கடந்த வியாழனன்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு 69 புதிய முகங்களைத் தெரிவு செய்துள்ளனர். அவர்களுள் கணிசமானளவு தொகையினர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாவார்.பல புதிய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையை சிறிலங்கா அரசியலின் ஒரு புதிய யுகம் என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். பதுளை மாவட்டத்திலிருந்து இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உடித் லொகுபண்டாரவும் அமித் விதானகமகேயும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஹரின் பெர்ணாண்டோவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு நிசாந்த முதுகெட்டிகமவும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பிலிருந்து மனுசா நாணயக்காரவும் காலி மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்சவும் கேகாலை மாவட்டத்திலிருந்து கனகா ஹெரத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக இளைய முகங்களாக நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக துமிந்த சில்வாவும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பாக சுஜீவா செனசிங்கவும் கொழும்பு மாவட்டத்தில் தெரிவாகியுள்ள புதிய இளைய முகங்களாகும்;.
கம்பகா மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் றுவான் ரணதுங்க மற்றும் வசந்த சேனநாயக்காவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் றுவான் விஜயவர்த்தன மற்றும் உபெக்சா ஸ்வர்ணமாலி இளைய நாடாhளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாத்தறை மாவட்டத்திலிருந்து அகலங்க பூதிக பத்திரணவும் புத்தளம் மாவட்டத்திலிருந்து நிரோசன் பெரேராவும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து ரங்கா ஜெயரட்ணமும் தெரிவாகியிருக்கின்றனர்.



0 Responses to நாடாளுமன்றத்திற்கு சிங்களதேசத்தில் தெரிவான இளையமுகங்கள்