பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க முத்துக்குமரன் கைது செய்யப்பட்டதை(நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிவிப்பு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று சீமான் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்த இயக்கத்தின் பொறுப்பாளராக இருக்கும் முத்துக்குமார், தமிழர் மீட்சி படையில் இருந்தவர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்றும், அவர்களுக்கு ஆயுத உதவி செய்துவந்தார் என்றும் முத்துக்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் தஞ்சை கூட்டத்தில் பங்கேற்க வந்தவரை சென்னை போலீஸ் பின் தொடர்ந்தது. இரவு கூட்டம் முடிந்ததும் 11 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது கந்தக்கோட்டைக்கு அருகில், பின் தொடர்ந்து வந்த சென்னை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.பின்னர் இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்)கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் தலைமையேற்கிறார்.
இதற்காக புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை,சிவகங்கை,தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் சீமான் சீறுகிறார் என்று பேனர்கள்,கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
0 Responses to தேசியத் தலைவரின் தாயார், முத்துக்குமரன் விவகாரம்: சீறுகிறார் சீமான்