சென்ற ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் ஈழ விடுதலையையே மூச்சாகக் கொண்டு களமாடி பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்தனர்.
அவர்களின் பேரிழப்பின் வலியைச் சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழீழ மக்களின் வரலாற்றில் மிகவும் மோசமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, டென்மார்க் வாழ் தமிழீழ மக்களால் படுகொலையின்போது கொல்லப்பட்ட போராளிகள், மக்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஓகூஸ் நகரிலும் கொல்பெக் நகரிலும் 22-05-2010 அன்று நடைபெற்றது.
இவ்வலி சுமந்த நாளுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் எழுச்சியுடனும் வேதனையுடனும் வந்திருந்தனர். அதனால் மண்டபம் நிறைந்து வெளியிலும் மக்கள் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நாள் பொதுச்சுடரேற்றம், தேசியக்கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பித்து, அனைத்து மக்களாலும் அங்கு மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தூபிக்கான விளக்கேற்றமும் வணக்க நிகழ்வும் நடாத்தப்பட்டதுடன் பிரிகேடியர்கள், தளபதிகள், போராளிகளுக்கான விளக்கேற்றமும் வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடாத்தப்பட்டது.
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அவர்களால் நேரடியாகத் திரையில் சிறப்புரையாற்றப்பட்டது. அவ்வுரையில் எமது தமிழ் உறவுகளைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிறிலங்கா அரசை எவ்வாறு சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாம் என்றும் அதற்காக ஒவ்வொரு தமிழனும் செய்யவேண்டிய செயற்பாடுகள் பற்றியும் எடுத்து விளக்கப்பட்டது.
மேலும் இந்நாளில் எமது உறவுகளின் வலி சுமந்த தமிழிசைப் பாடல்கள் (சங்கீதப்பாடல்கள்), நாடகங்கள், நடனங்கள், கவிதைகள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடல் இசைக்கப்பட்டு, அனைத்து மக்களாலும் உறுதிமொழி எடுக்கப்பட்டதுடன் வலிசுமந்த நாள் நிறைவடைந்தது.

0 Responses to முள்ளிவாய்க்கால் வலி சுமந்த நாள் 2010: டென்மார்க்