தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்ட சிறீலங்கா துணைப்படை புளொட் கும்பலின் பத்திரிகை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பொதுமக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் அடிக்கடி புதிது புதிதாக தமிழ்ப் பத்திரிகைகள் முளைவிட்டுக் காணாமல் போகும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இராசதந்திரம் தெரியாது என்று கூறி ‘தாய்நிலம்’ என்ற பெயரில் புளொட் கும்பலின் மத்திய குழு உறுப்பினர் ஒருவரால் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதனால் கடும் சீற்றம்கொண்ட பாரிஸ் வாழ் தமிழீழ மக்கள், குறிப்பிட்ட பத்திரிகையை கடைகளில் இருந்து அகற்றித் தீயிட்டுக் கொளுத்தியும், குப்பைக்கூடைகளில் வீசியெறிந்தும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியிருப்பதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியரான புளொட் கும்பலின் மத்திய குழு உறுப்பினர், உமா மகேஸ்வரனின் நெடுங்கால நண்பராக விளங்கியதோடு, உமா மகேஸ்வரனின் மரணத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய உணர்வாளராகப் பாசாங்கு செய்து, சிறீலங்கா அரசுக்கான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இவரது சுயரூபம் கண்டறியப்பட்டு தமிழ்த் தேசிய ஊடகப் பணிகளில் இருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிறீலங்கா துணைப்படை புளொட் கும்பலின் பத்திரிகை மக்களால் தீக்கிரை