சிறீலங்காவில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் திருப்தி அடைந்துள்ளதால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெறும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக சிறீலங்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
போருக்கு பின்னர் சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சிறிலங்கா அரச தரப்பு குழு மேற்கொண்ட இரு நாள் பேச்சுக்களின் பின்னர் சிறீலங்கா குழுவில் இடம்பெற்ற முக்கிய அதிகாரியான நீதியாளர் நாயகம் மோஹான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
எனவே சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்துவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அதனை மீண்டும் பெறுவதற்கு சிறீலங்கா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாகவே பீரீஸ் தலைமையான குழுவினர் பிரசல்ஸ் சென்றிருந்தனர்.
இதனிடையே இரு தரப்பும் மேலும் பேச்சுக்களை தொடரவுள்ளதாக கூட்டாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிறீலங்காவின் நடவடிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் திருப்தியாம்: சிறீலங்கா