சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்த ஆலோசனைக்குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைப்பதை தடுக்கும் முயற்சியாக நாளை (24) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நாளை நியூயோர்க் சென்று பான் கீன் மூனை சந்திக்கும் பீரீஸ், அதன் பின்னர் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி லியாம் பெஸ்கோவையும் சந்திக்க உள்ளார்.
ஒரு வார பயணமாக அமெரிக்கா செல்லும் பீரீஸ் எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் கிலாரி கிளிங்டன் உட்பட அமெரிக்க வெளியுறவுத்துறையின் முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும் சிறிலங்கா குழு அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 Responses to ஐ.நா ஆலோசனைக்குழு அமைப்பதை தடுப்பதற்கு கடும் முயற்சி - நியூயோர்க் செல்கிறார் பீரீஸ்