Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடா தழுவி ஞர்யிற்றுக்கிழமை யூன் 20ஆம் நாள் நடைபெறவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் 24ஆம் நாள் திங்கட்கிழமை மாலை
முதல் ஆரம்பமாகியுள்ளது என தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வரும் யூன் 5ஆம் நாள் சனிக்கிழமை மாலை 9 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

வேட்பு மனுப்பத்திரங்களை தேர்தல் ஆணையகத்தின் இணையத்தளமான www.tamilelections.ca இல் இருந்து தரவிறக்கம் செய்யலாம் எனவும் அறியத்தரப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் தேசிய அவைக்கு கனடா தழுவி 22 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர். இதில் 9 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் கனடா தழுவி மக்கள் அளிக்கும் வாக்குக்கள் மூலம் தெரிவாவர். இதில் 5 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும், 2 ஆசனங்கள் பெண்களுக்கும், 2 ஆசனங்கன் இளையோருக்கும் என அமையும். 18 வயது முதல் 30 வயது வரையுள்ளோர் இளையோர் பட்டியலில் போட்டியிட தகுதியுடையோர்.

ஏனைய 13 இடங்களும் விகிதாசார அடிப்படையில், மாகாண பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவர். இதில் 7 பேர் ஒன்ராரியோ மாகாண உறுப்பினர்களாக ஒன்ராரியோ தழுவி மக்கள் அளிக்கும் வாக்குக்கள் மூலம் தெரிவாவர். இதில் 3 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும், 2 ஆசனங்கள் பெண்களுக்கும், 2 ஆசனங்கன் இளையோருக்கும் என அமையும்.

கியூபெக் உட்பட கிழக்கு கனடாவில் அங்குள்ள மக்கள் அளிக்கும் வாக்குக்களின் அடிப்படையில் 4 பேர் மாகாணப் பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவர். இதில் 2 ஆசனங்கள் பொதுப்பட்டியல் மூலமும், 1 ஆசனம் பெண்களுக்கும், 1 ஆசனம் இளையோருக்கும் என அமையும். இவ்வாறு மேற்கு கனடாவில் அங்குள்ள மக்கள் அளிக்கும் வாக்குக்களின் அடிப்படையில் 2 பேர் மாகாணப் பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவர்.

மேற்கண்ட ஆசனங்களுக்கு போட்டியிட விரும்புகின்றவர்களிடம் இருந்து வேட்பு மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

வேட்பாளர்களுக்கான கட்டுப்பணமாக பின்வரும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பொதுப்பட்டியல்: 1500 டொலர்கள்.
பெண்கள் பட்டியல்: 1250 டொலர்கள்.
இளையோர்: 1000 டொலர்கள்.

அத்துடன் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் பின்வரும் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களும் ஏக காலத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ கிழக்கு – 7 உறுப்பினர்கள், ரொரன்ரோ மேற்கு – 3 உறுப்பினர்கள், யோர்க் பிரதேசம் – 7 உறுப்பினர்கள், டூரம் பிரதேசம் – 3 உறுப்பினர்கள், பீல் பிரதேசம் – 5 உறுப்பினர்கள், மொன்றியல் பிரதேசம் – 5 உறுப்பினர்கள். மேற்கண்ட பிராந்திய சபை வேட்பாளர்களுக்கான கட்டுப்பணமாக 750 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையகம் மேலும் அறிவித்துள்ளது.

தேர்தல் குறிக்க மேலதிக விபரங்கள் தொடர்நதும் மக்களுக்கு அறியத்தரப்படும் எனவும் தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

தொடர்புகளுக்கு: 1-888-759-5002 என்ற தொலைபேசி இலக்கத்தில் அழைக்கலாம்.

1 Response to கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

  1. Total Waste

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com