வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் நேற்று முற்பகல் 11.15 மணியளவில் வீட்டிலிருந்தவரை கழுத்து நெரித்துக் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கட்டைவேலி கரவெட்டியைச் சேர்ந்த ஜெயபாலா விஜயலட்சுமி (வயது 54) என்பவரே கொல்லப்பட்டவராவார். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
குறித்த பெண் வீட்டில் இருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகை களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித் துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டார். வடமராட்சியில் ஒரு மாத காலத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கரவெட்டியில் நகைக்காக நடந்த கொலை!