பதிந்தவர்:
தம்பியன்
25 May 2010
வல்வை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.
பிரபாகரனின் தாயாரை வைத்தியசாலை சென்று பராமரித்து வருதில் வல்வை பெண்கள் முனைப்பாக ஈடுபட்டு வருகிறார்.
அவருடன் ஆறுதலாக பேச,
ஆறுதல் கூற,
உணவு வழங்க,
உதவி புரிய என்று பல்வேறு பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.
இதனால் பார்வதியம்மா மிகுந்த ஆறுதல் அடைந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்தோடு மூன்று மருத்துவதாதிகள் நியமிக்கப்பட்டு 24
மணி நேரம் பூரண கவனிப்பு வழங்கப்படுகிறது.
வைத்தியர் மயிலேறும் பெருமாள் இப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
மலேசியாவிற்கு சென்று உடல் நலத்தை அநியாயமாக பாதித்திருக்காவிட்டால் இப்போது அவர் மேலும் நலமாக இருந்திருப்பார் என்று எமக்கு தகவல் தந்த பிரமுகர் தெரிவித்தார்.
அம்மாவை பராமரிக்க நாம் இருக்கிறோம் என்ற குரலை இப்போது கேட்க முடிகிறது.
0 Responses to தேசியத் தலைவரின் தாயரைப் பராமரிக்கும் ஊர் மக்கள்