வவுனியா வதைமுகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள், எவ்விதமான உதவிகளும் இன்றி தொடர்ந்தும் அவல வாழ்வை எதிர்நோக்கி வருகின்றனர்.
சிங்களப் படைகளின் தாக்குதல்களில் வன்னியில் பல்லாயிரக்கணக்கான வீடுகளும், பாடசாலைக் கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ள நிலையில், சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், தொடர்ந்தும் தறப்பாள் கூடாரங்களிலும், தகரங்களால் அமைக்கப்பட்ட குடிசைகளிலும் வாழும் அவலம் நிலவுகின்றது.
ஒருபுறம் மீளக்குடியேறி மக்களுக்கான நிவாரண உதவிகளை பெருமளவில் சிங்கள அரசு மட்டுப்படுத்தியிருப்பதோடு, மறுபுறம் தொழில் வாய்ப்புக்கள் ஏதுமற்ற நிலையில் பட்டினி அவலத்தையும் மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
பயிர்ச்செய்கை, மீன்பிடி போன்ற சுயதொழில்களில் ஈடுபடுவதற்கான உபகரணங்கள் ஏதுமற்ற நிலையில், ஒருவேளை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வன்னி மக்கள் அலைந்து திரியும் நிலை காணப்படுகின்றது.
இதனிடையே, கட்டிடங்கள் தரைமட்டமாகிய நிலையில் பல பாடசாலைகள் மரங்களின் கீழ் இயங்கும் நிலை காணப்படுவதோடு, அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.

0 Responses to எவ்வித உதவிகளும் இன்றி அவல வாழ்வை எதிர்நோக்கும் வன்னி மக்கள்