Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசு முன்னெடுத்த இனவழித்தொழிப்பு யுத்தத்தில் முதன்மையான பாத்திரத்தை சீனா வகித்தமைக்கான தகவல்கள் தற்பொழுது மேற்குலக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் இன்டிப்பென்டென்ற் நாளேடு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இறுதி யுத்தத்தின் பொழுது சிங்களப் படைகளின் பாவனைக்கென ஆறு F-7 ரக மிகையொலி யுத்த விமானங்களை நன்கொடையாக சீன அரசாங்கம் வழங்கியிருந்தமை அம்பலமாகியுள்ளது.

இதனைவிட சிங்களப் படைகளுக்கான மேலதிக படைக்கல உதவிகளை வழங்குவதற்கும், சிங்கள வான்படையினருக்கு பயிற்சியளிப்பதற்கும், பாகிஸ்தானை சீனா ஊக்குவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றிற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் ஈழப்பிரச்சினை விவாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியதன் மூலம் சிங்கள அரசுக்கு இராசரீக வழிகளில் சீனா உறுதுணை புரிந்ததையும் இன்டிப்பென்டென்ற் நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது.

இதனிடையே, தமிழின அழித்தொழிப்பு யுத்தத்தில் சிங்கள அரசுக்கு முழு உலகமும் துணைநின்ற பொழுதும், தற்பொழுது இதற்கான பழியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலான கண்துடைப்பு நடவடிக்கைகளில் மேற்குலக சமூகம் ஈடுபடுவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0 Responses to தமிழின அழித்தொழிப்பு யுத்தத்தில் சீனா முதன்மையான பாத்திரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com