Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என அக்கட்சியின் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு இன்றைய பேச்சில் முதன்மைப்படுத்தப்படும் எனவும் அடுத்த கட்டமாகவே அரசியல் தீர்வு தொடர்பான கருத்து கேட்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு தற்போதுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையையே இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்மைப்படுத்தி முன்வைக்கவுள்ளது.

இதில் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எனத் தெரிவித்து உறவினர் வீடுகள், இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குடியேற்றம், வன்னிப் பெருநிலப் பரப்பில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வு, எதுவித வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, சரணடைந்த இளைஞர், யுவதிகளுக்கான பொது மன்னிப்பு,

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தை முற்றாக நீக்கி மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைப்போம்.

அடுத்த கட்டமாகத்தான் அரசியல் தீர்வு குறித்துக் கேட்கப்படும். அரசாங்கம் முன் வைக்கவுள்ள தீர்வுத் திட்டம் தொடர்பில் கேட்போம். அதனை வைத்து நாம் எவ்வாறு பேச்சு வார்த்தைகளைத் தொடரலாம் என்பதைக் கேட்போம். இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா குறிப்பிட்டார்.

0 Responses to கூட்டமைப்பின் 14 எம்.பிக்களும் மகிந்தவுடனான சந்திப்பில் கலந்துகொள்வர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com