Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பாரிசிலுள்ள பொபினி என்னும் பிரதேச மாநகரசபையினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் Grand slam de poésie ouvert என்னும் சர்வதேச கலைகலாச்சார நிகழ்வு 06.06.10 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 13ம் திகதிவரை நடைபெறவுள்ளன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் தமிழீழ மக்கள் சார்பாக பொபினி மாநகரசபையின் அழைப்பினை பொபினி தமிழ்சங்கம் மதிப்பளித்து அதில்கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தமிழ்ச்சோலை மாணவிகள் மூன்று நடனநிகழ்வுகளை வழங்கி அனைத்து மக்களின் பராட்டுதல்களை பெற்றிருந்தனர்.

தமிழீழ மக்களின் தாயக உணவுகளைகளையும் குறைந்த விலையில் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தின் எந்த இடத்தில் தமிழீழ மக்கள் வாழ்ந்தாலும் தமது மண்ணின் பெருமையை எல்லா வடிவங்களில் வெளிகொண்டு வரும் பிரான்சு வாழ் தமிழ்மக்களும், அவர்களை ஒழுங்கு பண்ணி பணியாற்றும் தமிழ்ச்சங்கங்களும், தமிழர் அமைப்புக்களும் என்றும் பெருமைக்கும், போற்றுதலுக்குமுரியவர்கள்.

இந்நிகழ்வில் சில நூற்றுக்கணக்கான தமிழ்மக்களும், பல நூற்றுக்கணக்கான பல்லின மக்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பரிஸ் - பொபினியில் மாநகரசபையின் சர்வதேச கலைகலாச்சார நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com