Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

17 யூன் 1940 ஆம் பிரான்சு

பதிந்தவர்: தம்பியன் 17 June 2010

பிரான்சு நாடு நாசி ஜெர்மனினால்ஆக்கிரமிக்கபாட்டு இருந்த நேரம். பிரான்சின் அப்போதைய ஆட்சியாளர்களில் ஒரு பகுதியினர் ஜெனரல் பேட்டின்(Général Pétain) தலைமையில் ஜேர்மன் ஆக்கிரமிபாலர்களுடன் கைகோத்து கொண்டிருந்த நேரம், பிரான்சில் தமது நாட்டின் விடுதலைக்க பல போராட்ட அமைப்புகள் உருவாகிய நேரம், இங்கிலாந்தில் பிரான்சு நாட்டு மக்கள் தஞ்சம் பெற்றிருந்தனர்.

அவர்களில் முக்கியமானவர் ஜெனரல் Charles de Gaulle, அவர் பிரான்சு நாட்டின் விடுதலைக்காக இங்கிலாந்து நாட்டு பிரதமர் உடன் தொடர்புகளை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல், பிரெஞ்சு நாடு ராணுவம் ஒன்றை கட்டியெழுப்பும் செயல் திட்டத்திலும் இருந்தார்.

அவர் இதை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த நேரத்தில் பிரான்சு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு செய்தியை 17 ஜூன் 1940யில் விட்டார்.

பிரான்சு மக்களே!

இன்று பிரான்சு ஒரு போர்களத்தில் தோல்வி கண்டிருக்கிறது ஆனல் பிரான்சு போரில் தோல்வி காணவில்லை. அரசுகள் கவில்கப்படலம், நாங்கள் சரணடையலாம், எங்கள் தன்மானத்தை இழந்து நிற்கலாம். எமது நாட்டை எமது மக்களை அடுத்தவனிடம் கையேந்தும் நிலைக்கு கூடவரலாம். அதேநேரத்தில் நாம் எதையும் இழந்து விடவில்லை.

இதுஒரு உலகபோர் என்றபடியால் நாம் எதையும் இழந்து விடவில்லை. விடுதலையான இந்த உலகத்தில், இதுவரை அதன் முழுசக்திகளும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு நாள் இந்த சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிரியை வீழ்த்தும். அந்த நேரத்தில் பிரான்சு அந்த வெற்றிக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த வெற்றியில் பிரான்சும் தனது பங்களிப்பை அளிக்க தயாராகவேண்டும். அப்போது பிரான்சு விடுதலை பெற்று தன் தன்மானத்தை மீட்டு தனது பெருமையை காட்டும். இதுதான் என் நோக்கம், எனது ஒரே நோக்கம். அதனாலே தான் இன்று, அணைத்து பிரான்சு மக்களுக்கு நான் அழைப்பு விடுகிறேன், என்னுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள், நீங்கள் எங்கே இருந்தாலும், இந்த போராட்டத்தில் இந்த திட்டத்தில், தியாகங்களுடனும், நம்பிக்கையுடனும் இணைத்து கொள்ளுங்கள்.

எங்கள் தேசம் அழிந்துகொண்டிருகிறது.

எல்லோரும் அதை பாதுகாக்க போராடுவோம்

ஜெனரல் தே கால்(Général de Gaulle)

இது பிரான்சு மக்களுக்கு என்று ஒரு பிரெஞ்சு நாட்டு ராணுவ தளபதி விட்ட அழைப்பு. இதில் கூறி இருப்பவைகள் எமக்கும் பொருந்தும், எமது நாட்டுக்கும் பொருந்தும்.இன்று எமது அரசு அழிக்கப்பட்டு எமது மக்கள் உரிமைகள் இழந்து, அங்கே கையேந்தும் நிலையில் நிற்கிறோம், ஆனால் நாம் எதையும் இழந்து விடவில்லை.

பெரும்சக்தியாக, பலம்வாய்த்த இனமாக, உலகு எங்கும் நாம் பறந்து வாழ்கிறோம். எமது போரரட்டம் புது வடிவங்கள் எடுத்திருக்கும் நிலையில், இந்த புதுவடிவங்கள் ஊடக நாம் மீண்டும் எம் உரிமைகளை வெல்லலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

இன்று எம்மிடம் இருக்கும் சக்தியை நாம் சரியான முறையில் வடிவமைத்து செல்லவேண்டும். இன்று, பிரான்சில் அன்று ஒரு தலைவர் அன்றைய கால சூழ்நிலையில் மக்களுக்கு விட்ட செய்தியை பிரான்சு நாட்டு மக்கள் நினைவு கூறுகிறார்கள்.

இந்த நாளில் பிரான்சு தமிழ் ஈழ மக்கள் பேரவை ஆகிய நாம் மக்களுக்கு விடுக்கும் செய்தி, எமது தேசம், நிலம் பரிபோய்கொண்டிருகிறது, எமது உறவுகள் ஊனம் உற்றவர்களாக, எம்மை பார்த்து, எம்மை எதிர்பார்த்து கொண்டிருகிறார்கள்.

நாம் புலம்பெயர்நாடுகளில் பலம் வாய்ந்த இனமாக என்ன செய்து கொண்டிருக்கிறோம், எமது போராட்டத்தை ஒருமைபடுத்துவோம், எமது சக்திகளை ஒருமைபடுதுவோம், நாளை நாம் நாடு அற்றவர்களாக தொடர்ந்து கையேந்தி வாழபோகிறோமா?

எம்முடன் வந்து இணைத்துகொள்ளுங்கள். எமிடம் ஒரு செயல் திட்டம் இருக்கிறது, அதன் மூலம் பல வெற்றிகளை அடையலாம் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கிறது.

நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள, உருவாகும் மக்கள் பேரவைகளுடன் சேர்ந்துகொள்ளுங்கள். எங்களால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அந்த நம்பிக்கையில் நீங்களும் ஒன்றிணைத்து கொள்ளுங்கள்.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தொடர்பு:

mte.france@gmail.com 06 15 88 42 21


0 Responses to 17 யூன் 1940 ஆம் பிரான்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com