எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, யூன் 20ம் நாள் கனடியத் தமிழர் தேசிய அவைக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பதையிட்டு மகிழ்வடைகிறோம்.சிறிலங்காப் பேரினவாதத்தால் மேற்கொள்ளப்படும் இனவழிப்புப் போருக்குள் சிக்கித் தவிக்கும் எம் உறவுகளுக்குகாக புலம் பெயர்ந்து வாழும் நாம், அனைத்து வழிகளிலும் குரல் கொடுத்து வருகிறோம்.
அந்த வகையில், 'மனித உரிமைக்கும் மனித நீதிக்கும் சமாதானத்திற்கும் குரலெழுப்பும் இந்த உலகமானது, உரிமைகேட்டு, நீதிகேட்டு, சமாதானவழியில் தீர்வுகேட்டு நிற்கும் எமது மக்களிற்குச் சார்பாகக் குரலெழுப்பவேண்டும். இதுவே உலகத்தின் இன்றைய தார்மீகக் கடப்பாடு ஆகும்" என்ற தேசியத்தலைவர்.
அவர்களின் கூற்றுக்கமைய, கனடியத் தமிழர் தேசிய அவை முழுவீச்சுடன் செயற்படுவதற்கு, பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று கனடா வாழ் எம் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு



0 Responses to கனடா வாழ் ஈழத்தமிழ் மக்களே! - தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு அறிக்கை