18.06.2010 அன்று ஜெர்மனி பெர்லினில் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கபட்டது . பொது சுடர், அகவணக்கம், மலர் வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இவ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறுவர்களின், இளையோர்களின் கவிதைகள், பேச்சுகள், எழுச்சி பாடல்கள், நடனங்கள் இடம்பெற்றன. சிறப்பாக இங்கு பிறந்து வளர்ந்த எம் பிள்ளைகள் எவ்வளவு உயிராக தமது தாய்மொழியையும் தமிழீழத்தையும் எம் தமிழீழ விடுதலையையும் நேசிக்கிறார்கள் என்று அவர்களின் அந்த எழுச்சி ஆக்கத்தில் இருந்து காணக்கூடியதாக இருந்தது..
சிங்கள இனவெறி அரசின் தமிழ் மக்களின் மீதான அடிமை படுத்தல் எப்படி காலம் காலமாக எம்மை ஆக்கிரமித்தது, சிறப்பாக எம் மாணவர்களை பிஞ்சு வயதினிலே எப்படி தாக்கியது என்பதை „பேனா ஏந்தும் கைகளை .........ஆயுதம் ஏந்த வைக்காதே ......." எனும் ஒரு குறும் நாடகத்தின் நாயகன் இனியவனின் குடும்பத்தின் ஊடாக இளையோர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இறுதியாக புலம் பெயர் இளம் சமுதாயத்துக்காக எங்கள் புரட்சி தமிழன், மானத் தமிழன் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் அனுப்பிய எழுச்சி காணொளி உரை காண்பிக்கப்பட்டு தமிழ் ஈழம் ஓர் நாள் மலரும் எனும் உறுதியோடு எம் தாயக மந்திரமாம் ... தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.. என்று உரத்து கூறி தியாகி சிவகுமாரனின் 36 ஆண்டு நினைவு பகிர்வு முடிவடைந்தது .



0 Responses to மாணவர் எழுட்சி நாள் 2010 - ஜெர்மனி: (படங்கள் இணைப்பு)