Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்று கடல் வழியாக இலங்கைக்கு வந்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அச்சம் வெளியிட்டுள்ளார். அவர் முல்லைத்தீவில் பாதுகாப்புப் படையினரின் முதலாவது பிராந்தியத் தலைமைக் காரியாலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு:

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு மிகவும் பலமாகவேயுள்ளது. ஆனால் அவர்கள் இராணுவ நடவடிக்கை யில் ஈடுபடக் கூடிய நிலையில் தற்போது இல்லை. குறிப்பாகப் பிரித்தானியாவில் உள்ள உலகத் தமிழர் பேரவை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசு, நோர்வேயிலுள்ள தமிழ்க் குழுக்கள் புலிகளின் கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. ஆகவே இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் அரச படையின் ஒவ்வொரு பிரிவினரும் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும்.

புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் கடற்படையினரின் பங்கு மிகவும் காத்திரமானது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வேறு நாடுகளிடமி ருந்து ஆயுதப் பயிற்சி பெற்று கடல் வழியாக இலங்கைக்கு வரக் கூடும். அவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு கடற்படையின ரைச் சேரும். இராணுவத்தினர் பொதுமக்க ளுடன் நல்லுறவைப் பேண வேண்டும்.

புலிகளின் உளவுத்துறையின் பலத்தைப் படையினர் உணர்ந்து கொள்கின்றமை அவ சியம். ஏராளமான தியாகங்களுக்கும் பேரின் இன்னல்களுக்கும் இடையில் படையினரால் நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.அந்த அமைதியைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்க வேண்டும். நாட்டை மீண்டும் இருள் அடர்ந்த யுகத்திற்குக் கொண்டு செல்லாமல் பாதுகாக்கும்.

கடந்த காலங்களில் முகாம்களில் கடமையாற்றும் படையினருக்குப் போதிய வசதி கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில் லை. அவருடைய கடமைகளைத் திறம்படச் செய்யக் கூடிய வகையில் அனைத்து வசதி களும் உடனடியாகச் செய்து தரப்படும் என அவர் மேலும் கூறினார். இதேவேளை முல்லைத்தீவில் இடம்பெயர் மக்கள் பூரணமாக மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் படை வீரர்களின் பிரசன்னம் வரையறுக்கப்படும் என முல்லைத்தீவுக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவு டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முல்லைத்தீவில் 5,6 பொலிஸ் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Responses to வெளிநாடுகளில் பயிற்சி பெற்று கடல்வழியாக வந்து புலிகள் தாக்கக்கூடும்: கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com