இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.'ஹைகோப்' வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் புலனாய்வுத்துறையினர் அறிக்கையொன்றைச் சமர்பித்தனர்.
வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
'ஹைகோப்' நிறுவனத்தின் ஊடக மேற்கொள்ளப்பட்ட ஆயுத கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சரத் பொன்சேகாவின் மருமகன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.



0 Responses to 23ஆந் திகதி பொன்சேகாவை நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு