Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகாரப் பசியினால் அரசாங்கமும் வயிற்றுப் பசியினால் மக்களும் வாடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சட்ட மா அதிபரின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டமை சட்டவிரோதமானது.

அரசியல் சாசனத் திருத்தங்களை மேற்கொள்ளும் குழுவில் சட்ட மா அதிபரும் அங்கம் வகிக்க வேண்டும். உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத் திருத்தப் பரிந்துரைகள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் கருத்துக்களைக் கோராது அரசியல் சாசனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அனுமதியளிக்காது.

மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அரசாங்கத்தின் எந்தவொரு ஜனநாயக விரோத செயலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு அளிக்காது. தங்களின் அதிகாரப் பசியைத் தீர்ப்பதற்கு முனைப்புக் காட்டுவதனை விடுத்து அரசாங்கம் மக்களின் பசியை ஆற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to அதிகாரப் பசியில் அரசாங்கம் வயிற்றுப் பசியில் பொதுமக்கள்: சுட்டிக்காட்டுகிறார் ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com