Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தத்தை வென்றெடுத்தபோதும் இன்னும் சமாதானம் வென்றெடுக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் யுத்தத்தை நிறைவு செய்துள்ளோமென்றும் யுத்தம் முழுமையாக வெற்றிகொள்ளப்பட்டுள்ளதென்றும் கூறிய அவர் ஜனாதிபதிக்கும் யுத்தத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆனால் சமாதானத்தை வெல்லவில்லையென்றும் வெற்றிகொள்ள ஆரம்பிக்கவுமில்லையெனவும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இதைப்பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

"நாம் நம்மிடமுள்ள சில விடயங்களை மற்றவர்களுக்கும் வழங்க எண்ணவேண்டும். மற்றவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவர்களும் மனிதர்களே. அவர்களும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் பல்லாயிரம் வருடங்களாகப் பணியாற்றியுள்ளனர்.

எம்மைப்போன்று இரத்தம் சிந்தியுள்ளனர். கண்ணீர் வடித்துள்ளனர். துன்பங்களை அனுபவித்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எம்மைப்போன்று அவர்களுக்கும் உரிமையுண்டு" என ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இங்கு கூறினார்.

"கேக் எனக்கு மட்டுமல்ல எனது சகோதரர்கள், பிள்ளைகள்,அவர்கள், இவர்கள் என வெட்டிச் சாப்பிடவேண்டும் ; அதாவது நம்மில் சிலர் மட்டும் சாப்பிடவேண்டுமென எண்ண முடியாது. இருக்கும் கேக்கை எமது நாட்டின் அளவுக்குக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும். அவர்களை ஒதுக்கும்போது பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன" எனவும் அவர் கூறினார்.

0 Responses to யுத்தத்தை வென்றாலும் இன்னும் சமாதானம் வென்றெடுக்கப்படவில்லை: சந்திரிகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com