அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சுமார் 20 அமைப்புக்களினால் ஏற்கனவே மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக எம்.ஏ.சுமந்திரன் தலையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
19வது திருத்தத்தை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவை என்று வலியுறுத்தி பல தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அப்படியான தேவைகள் எதுவும் இல்லை என்றே தான் உயர்நீதிமன்றில் ஆஜராகி வாதாடவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாராளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதம், எதிர்வரும் 09ஆம், 10ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

0 Responses to 19வது திருத்தத்துக்கு ஆதரவாக த.தே.கூ உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுத் தாக்கல்!