சிறீலங்கா அரசு அமைக்கவுள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் குழுவில் அனைத்துலக சமூத்திற்கு இடமில்லை என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் தெரிவித்துள்ளார்.
ஓன்பதாவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பீரீஸ் அங்கு பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டை லண்டனை தளமாகக் கொண்ட உத்திகளுக்கான கற்கைநெறி அனைத்துலக அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.
இதன் போது பீரீஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த சந்தர்ப்பத்தில் இறைமையுள்ள நட்டின் மீதான தலையீடுகளை அனுமதிக்க முடியாது. அதற்கான தேவையும் எமக்கில்லை. நியாயமான தீர்வை வழங்குவது குறித்து சிங்கள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
தமிழ்க் கட்சிகளை ஒருஙகிணைத்து அரசியல் தீர்வை காண்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to விசாரணைக்குழுவில் அனைத்துலகத்தின் தலையீட்டுக்கு அனுமதியில்லை: பீரீஸ்