Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி பரவிபாஞ்சன் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழையவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிகழ்வொன்றில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகள், இராணுவத்துக்கோ அரசாங்கத்துக்கோ சொந்தமானவை அல்ல. அந்தக் காலத்தில் யுத்தம் காரணமாக இராணுவம் அவற்றை கையகப்படுத்தியிருந்தது. அந்தக் காணிகளை ஓரிரு மாதங்களில் இராணுவத்தினர் மீள ஒப்படைப்பார்கள்.

அந்தக் காணிகள் விடுவிக்கப்படுமா, இல்லையா என்று மக்களுக்கு சந்தேகம் இருந்ததால், அங்கு பிரச்சனை ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தன் அங்கே சென்றார்.

சம்பந்தன் விடுதலைப் புலி உறுப்பினரா?, நாட்டை பிரித்தாலும் அவருக்கு நன்மை இல்லை. அவர் இருப்பது திருகோணமலையில். அவர் இருப்பது எங்களோடு. சம்பந்தர் இராணுவ முகாம் பக்கத்துக்கு செல்லவில்லை. காணிகள் இருக்கும் பக்கத்துக்கு தான் சென்றார் என்று இராணுவத் தளபதியே கூறினார்.

ஆனால், குறித்த கிளிநொச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தென்னிலங்கையில் உள்ள சில ஊடகங்கள் தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன. தீவிரவாதத்தை தோற்கடித்து, சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சேர்ந்து கட்டியமைத்த ஜனநாயக மற்றும் சுதந்திரமான சூழலை பாதுகாப்பதற்கு ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் சம்பந்தன் அத்துமீறி நுழையவில்லை: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com