வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற இராணுவ ட்ரக் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகனும் கொல்லப்பட்டனர்.இராணுவ ட்ரக் வண்டி அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்ட நிலையில் அவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பலியானவர்கள் தாண்டிக்குளம் ஐயனார் வீதியை சேர்ந்த 35 வயதுடைய சிவநேசன் பிரேமிளாதேவி, மற்றும் ஐந்து வயதான சிவநேசன் சயந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாய் விபத்து நடந்த ஸ்தலத்திலேயே பலியானார். எனினும் மோதுண்ட பின்னர் எழுந்து ஓடிய நிலையில் கீழே வீழ்ந்து மரணமானதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்
அவர்களது சடலங்கள் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளை மோதிய இராணுவ ட்ரக்கின் சாரதி, அருகில் வந்த பேரூந்து தான் மோட்டார் சைக்கிளை மோதியதாக தெரிவித்துள்ளார். எனினும் அங்கிருந்த பொதுமக்கள் ட்ரக் வண்டியே மோட்டார் சைக்கிளை மோதியதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பேரூந்தும் ட்ரக் வண்டியும் பொலிஸாரினால் விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளன.



0 Responses to அரச படைகளின் ட்ரக் மோதி வவுனியாவில் தாயும் மகனும் பலி