Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார உயரதிகாரி லின் பஸ்கோ இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்துள்ளார்.

முல்லைத்தீவில் 40 ஆயிரம் பேரை மீளக் குடியேற்றி இருப்பதாக சிறீலங்கா அரசு கூறிவரும் நிலையி;ல், அங்கு சென்ற லின் பஸ்கோ சிறீலங்கா அரசின் மீள் குடியேற்ற நடவடிக்கையைப் பாராட்டி இருப்பதாக அரச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சிறீலங்கா படைகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் சிலரே பஸ்கோவைச் சந்திக்கவும், தமது நிலைப்பாட்டை விளக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா படைகள் மற்றும் புலனாய்வுத் துறையினரது பிரசன்னம் காரணமாக மக்கள் தமது உண்மை நிலையினை முழுமையாக எடுத்துரைக்க முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில இடங்களிற்கு மட்டுமே பஸ்கோவை அழைத்துச் சென்ற படையினர், குமாரபுரம் பகுதியில் தாம் கண்ணிவெடி அகற்றி வருவதாகக்கூறி அந்த நடவடிக்கைகள் பற்றியும் விளக்கியுள்ளனர்.

இதற்கு முன்னதாக கொழும்பில் சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை லின் பஸ்கோ சந்தித்துக் கலந்துரையாடியதுடன், இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேயும் கலந்து கொண்டார்.

சிறீலங்கா அரசுத் தலைவருடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா, அரசுத் தலைவரது செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள லின் பஸ்கோ, இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் தேசிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிறான் அலஸ் ஆகியோரைச் சந்தித்துள்ள அதேவேளை, நாளை வியாழக்கிழமை தமிழ், முஸ்லீம் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Response to ஐ.நா அதிகாரி லின் பஸ்கோ முல்லைத்தீவு சென்றார்: மக்கள் சந்திக்க படையினர் தடை

  1. All the UN Senior Official's in Sri Lanka are supporting the Government. Mr.Neil Bhune, Resident Coordinator is a government supporter. He never reported the real situation to the head quarters. There were other Staff like Mr.Chris and Mr.Harun Khan also provided the government with Military informations from Vanni. As long as Neil is there government will have positive feelings from the Diplomatic missions.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com