Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படமொன்றை எடுத்துச் சென்ற சிங்களவர் ஒருவர் புத்தளத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரனின் சிறிய படமொன்றை டிஜிட்டல் முறையில் பெரிதாக்கி எடுத்துச் செனற் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிஜிட்டல் முறையில் படத்தைப் பெரிதாக்கிய புகைப்பட நிறுவனம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை கொண்டாடும் தருணத்தில் இவ்வாறான ஓர் படத்தை ஏன் எடுத்துச் சென்றார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புத்தளம், கல்லடி பிரதேசத்தில் உள்ள புகைப்படக் கடையொன்றிலிருந்து முச்சக்கர வண்டி மூலம் படத்தை எடுத்துச் செல்லும் வழியில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் எம். சந்தன என்ற சிங்களவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

0 Responses to தலைவர் பிரபாகரனின் படமொன்றை எடுத்துச் சென்ற சிங்களவர் புத்தளத்தில் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com