Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து தாம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு தீர்மானம் எடுக்கப் போவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு புதிய பிரதமர் ஜுலியா கில்லார்ட், இலங்கையில் அப்பாவி சிறுவர்கள் முட்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்டிருப்பதை பார்க்க அவுஸ்திரேலியா ஒருபோதும் விரும்பாது என கூறியுள்ளார்.

முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இலங்கையையும் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்த அகதிகளின் புகலிடக் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதை அண்மைக் காலமாக நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஜுலை மாதம் 8ஆம் திகதி மறு மதிப்பீடு செய்யப்படும் என்று நேற்று அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு தெரிவித்த பிரதமர் கில்லார்ட் அதற்கு முன்னதாக இலங்கை தொடர்பாக தாம் ஒரு தீர்மானத்தை எடுக்கப் போவதாகவும் கூறினார்.

எனவே, அது பற்றி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் திட்டமிடப்பட்ட திகதியான ஜுலை மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயங்கள் குறித்து தம்மால் விரிவாக கூற முடியும் என்றும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா உண்மையான அகதிகளை கௌரவித்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தாம் நம்புவதாக தெரிவித்த பிரதமர் கில்லார்ட் சிறுவர்களுக்கான பராமரிப்பையும் அரவணைப்பையும் வழங்குவது அவுஸ்திரேலியப் பண்பு என்றும் கூறினார்.

தாய், தந்தையர் என்னதான் தீர்மானம் எடுத்தாலும் அப்பாவி சிறுவர்கள் முட்கம்பிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்ப்பதற்கு அவுஸ்திரேலியா ஒருபோதும் விரும்ப மாட்டாது என்று புதிய பிரதமர் கூறினார்.

அத்தகைய நடவடிக்கை குறித்து மக்கள் என்னதான் நினைத்தாலும் சிறுவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்கள். எனவே, அவர்கள் எங்களால் இயன்ற பாதுகாப்பையும் பராமரிப்பையும் பெற வேண்டியவர்களாவர் என்றும் கில்லார்ட் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு கூறினார்.

0 Responses to முட்கம்பி வேலிக்குள் சிறுவர்கள் அடைத்து வைக்கப்படுவதை ஆஸி. ஒரு போதும் விரும்பாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com