வன்னியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வதை முகாம்களில் இருந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இன்நிலையில் வன்னியில் தற்போது குடியேறியுள்ள மக்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் எவையும் இல்லை.
குறிப்பட்ட தொகை இளைஞர்களும் யுவதிகளும்தான் வன்னியில் மீள்குடியேறியுள்ளார்கள். இதிலும் ஏராளமான இளம் விதவைப் பெண்கள் காணப்படுகின்றார்கள். இவர்களின் உதவிகூட சில ஆண்களில் கைகளில் தான் தங்கியுள்ளது. இன்நிலையில் மக்களுக்கான தொழில்வாய்ப்பு எதனையும் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவில்லை.
முன்னைய காலத்தில் எத்தனையோ நிறுவனங்கள் அமைப்புக்கள் இயங்கின. அவற்றின்கீழ் நாள்தோறும் பணிசெய்து வருமானம் ஈட்டிய மக்கள் தற்போது எதுவித வேலைவாய்ப்புக்களும் இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். சிறீலங்காப்படையினரின் நாசுக்கான சிலவேலைகளினால் இளைஞர்களை சீர்குலைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
வன்னியைப் பொறுத்தமட்டில் எங்கெங்கெல்லாம் சிறீலங்காப்படையினர் நிலைகொண்டுள்ளார்களோ அங்கெல்லாம் அவர்களுக்குத் தேவைகளுக்கான சிறிய வணிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் புகைத்தல் மற்றும் மதுபான போத்தல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இன்நிலையில் வருமானம் இல்லாத தமிழ் மக்களை கள்ளச்சாராயம் காச்சி விற்பதற்கு சிறீலங்காப படையினரும் துணை நிற்கின்றார்கள். அதாவது வன்னியில் தொழில் இல்லா மக்கள் கள்ளச் சாரயத்தினை காச்சி விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கில் இவ்வாறு தமிழ்மக்கள் செய்கின்றார்கள்.
இவர்களின் பின்னணியில் சிறீலங்காப்படையினர் உதவிகைளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் அங்குள்ள இளைஞர்கள் சிறீலங்காப்படையினரின் நண்பர்களாக காணப்படுகின்றார்கள். இவ்வாறு கள்ளச்சாரயம் குடிக்க வரும் சிறீலங்காப்படையினர் தமிழ் இளைஞர்களுக்கு புகைத்தல் பொருட்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் தமிழ் மக்களை சீர்குலைக்கும் சிறீலங்காப்படையின் தொடக்க செயற்பாடாக வன்னியில் காணப்படுகின்றது. இது பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தப்போகும் என்பதை எவரும் அறிந்திருக்கப்போவதில்லை.
இவ்வாறுதான் வன்னியில் மீள்குடியேறியுள்ள மக்களின் நிலமைகள் தொடர்ந்து செல்கின்றது. இரவு வேளைகளில் பெண்கள் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டுவதும் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக ஆரம்பிக்கும் படையினரின் சேட்டைகள் - பாலியல் சேட்டைகளையும் புரிகின்றனர்.

0 Responses to தமிழ் இளைஞர்களை நாசுக்காக சீர்குலைக்கும் சிறீலங்கா சிங்களப்படைகள்