Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் நெடுஞ்சாலைகள் துணையமைச்சர் மேர்வின் சில்வாவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவேன் என, சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று எச்சரிக்கை செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதீட்டை மீதான விவாதம் இடம்பெற்று வரும் நிலையில், அப்பி வெனுவின் அப்பி (நமக்காக நாம்) என்ற திட்டத்தில் சேகரிக்கப்பட்ட நிதி பற்றி சரத் பொன்சேகா தலைமையிலான தேசிய தேசிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெட்டி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தனது வழமையான பாணியில் மிகவும் கோபத்துடன் மேர்வின் சில்வா பதிலளிக்க முனைந்தபோது சபாநாயகர் விடுத்த எச்சரிககையை அடுத்து அமைதியாக இருந்துள்ளார்.

ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடாவடித்தனங்கள் காரணமாக மேர்வின் சில்வாவை அடிதடி அமைச்சர் என ஊடகங்கள் வர்ணித்து வருகின்றன.

0 Responses to மேர்வின் சில்வாவிற்கு சாபாநாயகர் எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com