புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அரசு கூட்டுச் சேர்கின்றது என்கிற குற்றச்சாட்டுத் தொடர்பில் அவர் இச்செய்திச் சேவைக்கு விளக்கம் அளித்தபோதே இவ்வாறு கூறினார். அவர் அப்பேட்டியில் தெரிவித்தவை வருமாறு,
புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த புலிகள் மற்றும் புலி ஆதரவு சக்திகளுடன் அரசு கூட்டுச் சேர்கிறது என வெளியாகியிருக்கும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை. ஆனால் நாம் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களை அண்மையில் இலங்கையில் சந்தித்தோம். இவர்களுடனான பேச்சுக்கள் வெற்றிகரமாக அமைந்தன.
இவர்கள் இலங்கை வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி. மேற்கொண்டார். அரசைத் தொடர்ந்து எதிர்ப்பதில் எவ்வித பயனுமில்லை என்று இவர்கள் புரிந்து கொண்டனர். ஆகவே தமிழ்ச் சமூகத்தின் நன்மைகளை உத்தேசித்துச் செயற்பட விருப்பம் கொண்டனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அபிவிருத்தி வேலைகள், அவற்றின் குறைநிறைகள் பற்றி எம்முடன் பேசினார்கள்.
இவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித் தந்தமையில் கே.பியின் பங்கு உண்டு. இலங்கைக்கு வருகின்றமையில் இவர்களும் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தார்கள். இவர்கள் கே.பியைச் சந்தித்தார்கள். ஆனால் இவர்களுடன் கே.பி. வட மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேயில்லை.கே.பி. சிறையில்தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்றார்.



0 Responses to கே.பி தொடர்ந்தும் தடுப்புக்காவலில்: கோத்தபாய