Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது தாயகம் தமிழீழம் தொடர்பாக பிரான்சில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழரின்அரசியல், பொருளாதாரம், மனிதாபிமானம், கல்வி, சமூகநலம், போன்றவற்றைமுன்னெடுக்கும் செயற்பாட்டிற்கும் செயற்படுவதற்குமான அமைப்பொன்றை உருவாக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் எடுத்துக்கொண்ட ஆலோசனையின் பேரில் தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு என்கின்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இவ் முயற்சியில் மக்கள் அனைவரின் ( பிரெஞ்சு, தமிழ்) கருத்துக்களையும்உள்வாங்கி ஐனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நாடு தழுவிய யாப்பொன்றையும் கட்டமைப்பினையும் உருவாக்கி அதன் ஊடாக தாயகத்தில் துன்பத்தின் விளிம்பில் இருக்கும் எமது மக்களுக்கு உதவுமுகமாகவும், இந்த அமைப்பின் ஏனைய செயற்பாடுகள், நிலைப்பாடுகள் பற்றி விளக்குமுகமாகவும் ஓர் ஒன்றுகூடலும் நடைபெறவுள்ளது.

இவ்ஒன்றுகூடலில் பிரான்சுவாழ் தமிழ்மக்கள் புத்திஐீவிகள், கல்விமான்கள்,அரசியல், அரசியல்விஞ்ஞானம் கற்போர், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூகசேவையாளர்கள், தொண்டர்கள், தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், அரச மற்றும் அரச சார்பற்ற செயற்பாட்டாளர்கள் மேலும் எமது தேசியத்தின் இருப்புக்கும் பணியாற்ற விரும்பும் அனைவரையும் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தந்து தமிழீழ மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்கு அனைத்து வழிகளிலான ஒத்துழைப்பையும் தந்துதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஒன்றுகூடல் நடைபெறும்

இடம்: Salle de Conférence- Mairie de Bagnolet Place Salvador Allende

Metro: Gallieni

காலம்: 19.07.2009 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: பி.பகல் 17.00 மணிக்கு

0 Responses to தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு விடுக்கும் அறிவித்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com