Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு .நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவின் செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவினை அமெரிக்கா கோரியுள்ளது. .நா. வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு .நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சுஸானா ரைஸ் தெரிவித்துள்ளார் என்று பி.ரி.. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு .நா. செயலாளர் அமைத்துள்ள நிபுணர்குழு தொடர்பாக சிறிலங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந்த நிபுணர்குழு விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாட்டிற்குள்ளேயே அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா இந்த வேண்டுகோளை சிறிலங்காவை நோக்கி விடுத்துள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்காவிடம் தாராளமான ஆதாரங்கள் உள்ளன என்று பன்னாடு அமைப்பு பிரநிதிகளாலும் தெரிவிக்கப்பட்டுவருகின்றநிலையில், சிறிலங்காவுக்கு அமெரிக்கா இந்த தயவான வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அடம்பிடிக்காமல் விசாரணைக்கு அனுசரணை வழங்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com