Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனத்தை வரவேற்பதாக நோர்வே, மற்றும் அவுஸ்திரேலிய அரசுகள் அறிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனத்தை வரவேற்பதாக நேர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் கொழும்பிலிருந்து ஒஸ்லோ சென்ற ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கையில் காணப்படும் யுத்தத்திற்கு பின்னரான ஒரு சூழ்நிலையில், நிரந்தர அரசியல் தீர்வு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய பச்சைக் கட்சி கொண்டுவந்த பிரேரணையை ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய செனட் சபை, இந்த நிபுணர் குழு நியமனத்தை வரவேற்பதாகத் தெரிவித்து அந்தப் பிரேரணையை ஏற்றுக்கொண்டுள்ளது.

0 Responses to இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழு: நோர்வே, அவுஸ்திரேலியா வரவேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com