Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா நலன்புரி முகாம்களில் அடுத்தவேளை உணவிற்கு என்னவழி என ஏங்கியநிலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களிடம் வெசாக் கேளிக்கைக்கொண்டாட்டங்களுக்கு கட்டாயமாக பணம் பறிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:

வவுனியா செட்டிகுளம் வலயம் நான்கு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றப்படாத மக்களிடம் நடைபெற்ற வெசாக் நிகழ்வினை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும் எனவே அனைவரும் பணம் வழங்கவேண்டும் என கிராம அலுவலர்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பணம் பிடுங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகஉணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற அரிசி, மா, சீனி உட்பட்ட பொருட்களை மிச்சப்படுத்தி அவற்றினை அறாவிலைக்கு விற்றே மக்கள் தமது ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்துவருகின்றனர்.

இவர்களில் பலரைக் கொண்ட குடும்பங்களுக்கு அந்தப் பொருட்கள் போதாமையும் காணப்படுகின்றது. இந் நிலையில் இவ்வாறாக பணம் சேர்க்கப்பட்டதால் மக்கள் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக முகாம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமக்கு பணம் வழங்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் தமது பொருட்களை விற்பனை செய்து பணம் வழங்கியதாகவும் முகாம் மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை இந்தமாதம் நடைபெறவுள்ள பொசன் எனப்படும் சிங்களவர்களின் கேளிக்கைக் கொண்டாட்டத்திற்காகவும் பணம் பிடுங்கல் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to வெசாக், பொசன் கேளிக்கைக்காக முகாம்மக்களிடம் பணம் பிடுங்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com