Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை பெறு வதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கத்தால் அமைக்கப்பட்டுகின்றமையை பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கின்றது என்று அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆனால், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஏன் இவ்வாறானதொரு நிபுணர்கள் குழுவை நியமிக்க முயற்சி எடுத்துள்ளார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் கூறியவை வருமாறு:

ஐக்கிய நாடுகள் சபை எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது. அவர் இவ்வாறு நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கான காரணம் என்ன? அதாவது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசு சிறந்த முறையில் விளக்கம் அளிக்கவில்லையா? அந்த விடயத்தில் அரசு பலவீன மாக இருந்துள்ளதா என்று பார்க்கவேண்டும்.

அரசு இந்த விடயத்தில் என்ன செய்கின்றது என்று நாம் வினவுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அரசு எதிர்ப்பு வெளியிட்டு வந்தபோதிலும் .நா. அந்த விடயத்தை கைவிடவில்லை. ஆனால் இவ்வாறு உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்க முடியாது - என்று ரவி கருணாநாயக்க கூறினார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியும் எதிர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com