உடலாலும் மனதாலும் போரின் வடுக்களை சுமந்த தமிழ்மக்கள், போர்முடிவடைந்து ஒருவருடமாகி இன்னமும்கூட தமது வாழ்வின் வலிகளுக்கு மருந்துபோடுவதற்கு வழியின்றி அநாதைகளாக அந்தரித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த உறவுகளுக்கு உரிமையோடு கைகொடுப்பதற்கு என்றைக்குமே பக்கபலமாக நின்றுகொண்டிருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது சொந்தங்களுக்கு தொடர்ந்தும் உதவியளித்து வருவதோடு, அவர்களை வாழ்வின் அடுத்த கட்டநிலைக்கு தூக்கிவிடுதவதற்கும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்கள்.
அதன் ஒரு அங்கமாக, ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் "பட்ச் வேர்க்" என்ற அமைப்பு தாயகத்தில் போரின் வடுக்களால் அவயவங்களை இழந்து அந்தரித்துவாழும் உறவுகளுக்கு அபயமளித்து அவர்களுக்கான உடனடி உதவிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த உதவிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பட்ச் வேர்க் அமைப்பின் ஊடாக எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மெல்பேர்னில் "ஆஞ்சநேயம்" எனும் நாட்டிய நடன நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளது.
விக்டோரிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நாட்டிய நடன நிகழ்வு மெல்பேர்ன் றிங்வூட் ஈஸ்ட்டில் மைன்ஸ் வீதியில் அமைந்துள்ள கரலியக்கா மண்டபத்தில் (Karralyka Centre, Mines Road, Ringwood East, 3135(Melway Ref: 50 A6)) நடைபெறவுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின் ஆஸ்திரேலியா சார்பில் தெரிவாகியுள்ள இளங்கலைஞர் சேரன் சிறீபாலன் வழங்கவுள்ள இந்த நாட்டிய நடன நிகழ்விற்கு வருகை தந்து அந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தாயக உறவுகளுக்கு உதவியளிக்கும் நிதி திரட்டும் திட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளும்படி விக்டோரிய தமிழ் இளையோர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுக்களை விக்டோரிய தமிழ் இளையோர் அமைப்பினரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களிற்கு,
ஜெகனை 0430 007 231 அல்லது கரனை 0430 411 469இல் தொடர்பு கொள்ளவும்.
வலிகளை சுமக்கும் இனத்துக்கு வழியமைப்போம், தமிழர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் என உறுதிகொள்வோம்.
தமிழ் இளையோர் அமைப்பு
விக்டோரியா.




0 Responses to விக்டோரியா தமிழ் இளையோர் அமைப்பின் ஊடக அறிவித்தல்