Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கத் தவறி இருக்கின்ற சூழ்நிலையில் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணையை பிரிட்டன் முன்னின்று நடத்தவேண்டும் என்று பிரிட்டனின் தொழிற்கட்சி எம்.பி. அன்ரூ லௌவ் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் விவாதம் இடம்பெற்றது. தொழிற்கட்சி எம்.பி. சியோ பாயின் மன்டொனாக் தனிநபர் பிரேரணை ஒன்றை இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகச் சமர்ப்பித்து அங்கு உரையாற்றினார்.

அப்போது குறுக்கீடு செய்தபோதே அன்ரூ லௌவ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சியோபாயின் மக்டொனாக் எம்.பியால் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக் கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் நிராகரிக்க முடியாதவை.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக .நா. நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டியது மேற்குலகின் கடமை. குறிப்பாக இந்த விசாரணைகளுக்கு பிரிட்டன் தலைமை தாங்கவேண்டும் என்றார்.

அன்ரூ லௌவ் எம்.பியின் இந்த யோச னையை ஏற்றுக்கொள்கின்றார் என்று சியோ பாயின் மக்டொனாக் எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில் கூறினார்.

0 Responses to சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்: ஐ.நா. தவறினால் பிரிட்டன் விசாரணை நடத்தவேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com