Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தனிநாட்டை பெற்றுக்கொள்வதற்கான அரசியல் மாற்றம் இன்றைய நிலையில் தமிழகத்திலிருந்தே உருவாகவேண்டும். ஈழத்தமிழர்களின் உரிமை தொடர்பாக தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவை கடைப்பிடித்துவரும் கொள்கைகளுக்கு அப்பால் அரசியல் புரிதல் நிலை தமிழகத்தில் உருவாகவேண்டும் என்று மலேசியாவின் பெனானங் மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார்.

தற்கால அரசியல் நிலைவரம் தொடர்பாக தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தனது செவ்வியில் மேலும் கூறியுள்ளதாவது:-

சிறிலங்காவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் தெளிவான பார்வையோ இயலுமையோ இல்லாதவர்களவே காணப்படுகிறார்கள். சில அமைப்புக்கள் இந்தியாவினால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக காணப்படுகின்றன.

மேற்குலகில் உள்ளவர்கள் சிலர் ஈழத்தமிழர்களின் விடுதலை தொடர்பிலான வரலாறு மற்றும் அடிப்படையை அறியாதவர்களாக காணப்படுகின்றனர்.

சிறிலங்கா அரசுடன் தமிழர்களின் உரிமை தொடர்பாக பேச முடியாதளவு இனவெறியர்களாக அவர்கள் காணப்படுகிறார்கள்.

ஆகவே, இன்றைய நிலையில், ஈழத்தமிழர்களுக்கு மாத்திரமன்றி உலகத்தமிழர்களுக்கே அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கும் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவை முன்னரைவிட இன்னமும் அதிகரித்துள்ளது. அந்த மாற்றம் தமிழகத்திலேயே உருவாகவேண்டும்.

தமிழகத்தை இன்றை 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் எட்டப்பன் ஆண்டு வருகிறார். தனித்தமிழீழம் உருவாகுமானால், அது தமிழகத்தினதும் இந்தியாவினதும் ஒருமைப்பாட்டுக்கும் பாதகமாகிவிடும் என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் ஈழத்தமிழர்களின் உரிமைகளை ஓரங்கட்டுவதற்கான ஒன்றாகும்.

இது கருணாநிதிக்கும் தெரியும். ஆனாலும், சந்தர்ப்பவாதத்துடன் பேராசை பிடித்த பித்தலாட்டக்காரராக அவர் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கும் தமிழர் முற்போக்கு சக்திகளை வலுவிழக்கச்செய்யவும் உதவிபுரிந்தவராக இன்றும் ஆட்சியிலிருந்து வருகிறார்.

0 Responses to தமிழீழ உருவாக்கத்துக்கான அரசியல் மாற்றம் தமிழகத்திலேயே உருவாகவேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com