Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு லெப்;. கேணல் தவம் நினைவாக 2வது தடவையாக நடாத்திய குறும்படவிழா 28.08.10 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.
லெப். கேணல் தவம் திருவுருவப்படத்துக்கான மலர் மாலையினை விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மூத்த கலைஞர் . ரகுநாதன் அவர்கள் அணிவிக்க ஈகைச்சுடரினை கப்டன் சூரியதேவனின் சகோதரர் ஏற்றிவைத்தார்.

இவ்வாண்டு இப்போட்டியின் நடுவர்களாக
01.திருமதி.குளோறியானா செல்வநாதன் (நடுவர் சர்வதேச திரைப்படவிழாக்கள், ஆவணபடத்தயாரிப்பாளர்) 02.Arne Brücks, M.A. (விரிவுரையாளர் சினிமா, தொலைக்காட்சி அக்கடமPotsdam Berlin) 03.திரு. வாசுதேவன் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பிரான்ஸ் ஆகியோர் பணியாற்றினர்.

நோர்வே, பிரித்தானியா, சுவிஸ், பிரான்சு ஆகிய நாடுகளில் இருந்து இப்போட்டியிற் கலந்து கொண்ட படங்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான பன்னிரண்டு படங்கள் விழாவி;ல் திரையிடப்பட்டதுடன் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படங்களுக்கும் பங்கு பற்றலுக்கான தவம் குறும்படவிழா நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் படங்களில் பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு தவம் குறும்படவிழாவில் சிறப்பு நிகழ்வாக பவளவிழா காணும் மூத்த கலைஞர் திரு..ரகுநாதன் அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்"
விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. ஈழத்தமிழ் சினிமாத் துறையின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை இத்துறையில் அவர்செய்து வரும் அனைத்து பணிகளுக்கும் மதிப்பளித்து இவ் உயர்விருதினை தமிழர் கலைபண்பாட்டு கழகம் பிரான்சு வழங்கியது.

நடுவர்களின் கருத்துரையினைத் தொடர்ந்;து இறுதியாக 2010 தவம் குறும்படவிழாவின் முதற்சிறந்த படங்களுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

சிறந்த 3வது படமாக கலாச்சாரம் (பிரான்சு) இயக்குநர் . ரமணன்
லெப் கேணல் தவம் குறும்படவிழா 2010 இன் சிறந்த படமாக
.பாஸ்கர் இயக்கிய எனக்கும் உனக்கும் குறும்படம் (பிரான்சு) தெரிவு செய்யப்பட்டது.
சிறந்த 2வது படமாக தெரிவு செய்யப்பட்டிருந்த படமானது, சர்வதேச திரைப்படவிழாக்களில் பின்பற்றப்படும் அடிப்படை விதிகளை மீறியுள்ளமையால் அப்படத்திற்கு எம்மால் வழங்கப்பட்ட பரிசுகள் செல்லுபடி அற்றது என்பதை அறியத்தருகின்றோம்.

வெற்றி பெற்ற படங்களுக்கு தவம் நினைவு விருதும் பணப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிறப்பாக நடைபெற்ற லெப் கேணல் தவம் குறும்படவிழா 2010

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com