Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் பயணம் இன்று 25வது நாளைத் தொட்டிருக்கின்றது.

கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கடும் மழை இன்று காலையில் சற்று ஓய்வடைந்து காணப்படுகின்ற போதிலும், மீண்டும் மழை பெய்வதற்கான வானிலைத் தோற்றம் இருப்பதாக சிவந்தனுடன் இணைந்து நடப்பவர்கள் கூறுகின்றனர்.

மழைக் குளிரினால் உடலும், கால்களும் விறைப்படைவதனால் மிகுந்த சிரமத்தின் மத்தியில், ஆனால் மன உறுதியுடன் தனது மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

இன்று காலையில் பரிஸ் நகரில் இருந்து சென்ற இளையோர் உட்பட 8 பேரில் சிலர் சிவந்தனுடன் இணைந்து நடக்க ஏனைய சிலர் ஊர்திகளில் பின்தொடர்ந்து செல்லுகின்றனர்.

நேற்று 10 மணித்தியாலங்களில் 30 கிலோமீற்றர்கள் நடந்திருந்த சிவந்தன், இன்று காலையில் Essard Le Verger என்ற இடத்தில் இருந்து Septmoncel நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார்.

நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

பரிஸ் நகரில் இருந்து 498 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 60 கிலோமீற்றர்களே இருக்கின்றன. லண்டனில் இருந்து பரிஸ் நகர் ஊடாக இதுவரை 927 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார்.

இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான .நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to 25வது நாளாக கடும் மழையின் மத்தியில் சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com