விடுதலைப் புலிகளின் பேர்ண் மாநிலப் பொறுப்பாளர் திரு. மூர்த்தி ஈகைச் சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தமிழீழ மக்களவைப் பிரதிநிதி திரு. கொலம்பஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மலர் வணக்கத்தை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசின் பேர்ண் மாநிலப் பிரதிநிதி செல்வி. சுகன்யா, மக்களவைப் பிரதிநிதி செல்வி அருள்நிகிதா, இளையோர் அமைப்புப் பிரதிநிதி செல்வன் ஜீவன் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச் சோலையின் சுவிஸ் பொறுப்பாளர் திரு. சிவலோகநாதனின் உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
நிகழ்வில் உரையாற்றியோர், தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படுவதை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செஞ்சோலை பாடல்கள் இணைக்கபட்டுள்ளது.





மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to செஞ்சோலை 4ம் ஆண்டு நினைவு நிகழ்வு: சுவிஸ் (படங்கள் இணைப்பு)