Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையே பிரதமர் வேட்பாளருக்கான போட்டி ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக செயற்படும் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கிடையிலேயே பிரதமர் வேட்பாளருக்கான போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 76க்கும் அதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி வருகின்றனர். எனினும், மஹிந்த ராஜபக்ஷ போன்ற மோசடிக்காரரை தான் ஒருபோதும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, மூன்றாவது அணியிலேயே மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்த நிலையிலேயே, சுதந்திரக் கட்சிக்குள் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையில் பிரதமர் வேட்பாளர் போட்டி ஏற்பட்டுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பிரதமர் வேட்பாளர் யார்?, சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com