ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (31.08.2010) 5வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வாழ்த்துச்செய்திகளுடன் உற்சாகத்துடன் 5வது நாளாக தொடரும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மோசமான காலநிலையிலும் நேற்று (30.08.2010) Lausanne-Renens பிரதேசத்திலிருந்து Epalinges, Ropraz ஊடாக 29km தூரம் நடந்து Moudon பிரதேசத்தை மாலை 21.00 மணியளவில் சென்றடைந்தனர். இன்று (31.08.2010) இங்கிருந்து நடைபயணம் தொடருகின்றது.
நேற்றும் இவர்கள் செல்லும் பிரதேசங்களில் பல இடங்களில் தமிழ் மக்கள் உற்சாகமளித்து சிற்றுண்டிகளையும் பானங்களையும் வழங்கி ஆதரவளித்ததுடன் நடப்பதற்கு உகந்த சப்பாத்துக்கள் மற்றும் ஆடைகளையும் அன்பளிப்பாக வழங்கினர்.
அத்துடன் பலர் இவர்களோடு இணைந்து நடந்து சென்றதுடன் தொடர்ந்து இணைந்து நடப்பதற்கு ஆர்வத்துடன் பலர் எம்முடன் தொடர்புகொண்டுள்ளனர்.
சுவிஸ், கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் தொடர்புகொண்டு இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமளித்து வருகின்றனர்.
இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார்.
அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to 4வது நாளில் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மனிதநேய நடை பயணம்