Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுதந்திர வாழ்விற்காய் ஏங்கிநிற்கும் 75 ஈழத்தமிழ் அகதிகளாகிய நாங்கள் அனைவரும் இன்றைய தினம் சுதந்திர தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடும் மலேசிய அரசிற்கும், அதன் மக்களுக்கும் எம் சார்பிலான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சொந்த மண்ணிலே சுதந்திரமற்று வாழவழியின்றி, இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு எதுமின்றி சுதந்திர வாழ்விற்கு ஏங்கும் எம் 63 பேரை விடுவித்து தற்காலிகமாக மலேசியாவிலே சுதந்திர காற்றை சுவாசிக்க உதவிசெய்த மலேசியா அரசிற்கும், நாட்டின் பிரதமருக்கும் எம் உள்ளம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.

இன்றும் மலேசிய சிறையில் வாடும் எம் உறவுகள் 12 பேரை கருணைகூர்ந்து விரைவாக விடுதலை செய்து அவர்களுக்கும் சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தித் தருமாறு இந்நாட்டின் அரசையும், பிரதமரையும் இன்றைய நன்நாளில் கருணையுடன் கேட்டுநிற்கின்றோம்.

தற்காலிகமாக மலேசியாவில் மாற்றுச் செயலணியின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் தங்கியுள்ள எங்கள் அனைவரையும் உலக நாடுகளுடனும், .நாவின் UNHCR அமைப்புடனும் இணைந்து சுதந்தரமான சுபீட்சமான வாழ்வை உறுதிப்படுத்தித்தரும் வண்ணம் தாழ்மையுடன் வேண்டிநிற்பதுடன், இந்நாளிலே மனிதநேயத்தை நிலைநாட்டும் பட்டியலில் சிறப்புடன் திகழும் இந்நாடும் எமக்கு ஒரு பிரகாசமான வளமான வாழ்வை ஏற்படுத்தித்தரும் எனும் பெருநம்பிக்கையுடன் காத்துநிற்கின்றோம்.

நன்றி

சுதந்திர காற்றை தேடும்
75 ஈழத்தமிழ் அகதிகள்
பினாங்கு,மலேசியா



மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to மலேசிய அரசிற்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்: 75 ஈழத்தமிழ் அகதிகள்

  1. Sathosh Says:
  2. மேற்கூறிய கருத்துைரக்கு நன்றி . ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள www.yourastrology.co.in என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். இதில் கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு என உங்கள் எதிர்கால வாழ்கையை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், 'ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர்' இந்த தளத்தில் தான் முதன்மையாக வெளியிட பட்டுள்ளது.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com