Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், மலர் வணக்கமும் லண்டனில் இன்று (14-08-2010) நடைபெற்றது.

180 - 186 ஊப்பேற் டோஓடீண்க் ரோஆட் இல் அமைந்துள்ள லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயத்தில் செஞ்சோலை வளாகத்தினுள் படுகொலை செய்யப்பட்ட 55 மாணவிகள் உட்பட 61 பேருக்குமான நினைவு வணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றது.

மதியம் 12:30 மணிக்கு ஆரம்பித்த இந்த நினைவுவணக்க நிகழ்வில் முதலில் ஈகைச்சுடரேற்றல் இடம்பெற்றது. ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்த கப்டன் வாசுவின் சகோதரனும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்,போராளிகள் குடும்பங்கள் பராமரிப்பு குழுவின் ஒருங்கு கூட்டுனர் திரு. ருத்திராபதி சேகர் அவர்களும், ஆலய ஸ்தாபகரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும், தமிழீழ மக்களுக்கும் நீண்டகாலமாக உதவிவருபவருமான திரு.நாகேந்திரம் சீவரட்ணம் அவர்களும், ஏற்றிவைத்தனர்.

ஈகைச்சுடரேற்றலை தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து நினைவாலயத்தில் மக்கள் தீபங்களை ஏற்றி மலர் வணக்கத்தினை செலுத்தினர்.

மலர் வணக்கம் தொடர்ந்து இடம்பெற்ருக் கொண்டிருக்கையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் செஞ்சோலை படுகொலையின் நாங்காம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஆற்றிய உரை மக்களுக்கு நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி, மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு தூபிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட இன்று திறந்துவைக்கப்பட்ட நினைவாலயத்தை அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து பெருமை கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர், போராளிகள் குடும்பங்கள் பராமரிப்பு குழுவின் ஒருங்குக்கூட்டுனரான சேகர் அவர்கள் உரையாற்றுகையில்...

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 61 சிறுவர்களின் நினைவுநாளான இன்று நாம் தலைசாய்த்து அகவணக்கம் செலுத்தும் அதே நேரம் அங்கு செஞ்சோலையில் எவ்வாறு சிறுவர்கள் பராமரிக்கப்பட்டார்களோ அதே போன்று இன்று அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் முகாம்களிலும், மீள்குடியேற்றப் பகுதிகளிலும் உள்ள சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்வதையே நாம் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

இதுபோன்ற நினைவு நிகழ்வுகளில் அதிகளவான மக்கள் பங்குபற்றுவதோடு, அவர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் உணர்ந்து அந்த தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் வீண்போகாத அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும்.

மாவீரர் நாள் அன்றுமட்டும் மக்கள் ஓரிடத்தில் கூடினால் போதாது ஒவ்வொரு நினைவு நிகழ்விகளிலும் மக்கள் பெருமளவில் கூடி அவர்களுக்கான வணக்கத்தை செலுத்துவதோடு நெஞ்சங்களில் உறுதி எடுத்து எமது விடுதலைப்போராட்டத்தை விரைவுபடுத்தி வென்றெடுக்க வேண்டும்.

இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து செய்வதனால் மாவீரர்களின் தியாகங்களும், மக்களின் அழிவுகளும் மறக்கப்படாது நினைவூட்டப் படுவதோடு, இதன்மூலம் எழுச்சியை தொடர்ந்து எம் மக்கள் மத்தியில் தக்க வைத்து எமது போராட்டத்தை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

அத்தோடு மாவீரர் குடும்பங்கள், போராளிகள் குடும்பங்கள் என்பன தமிழீழ மக்களால் என்றும் மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் தமிழீழத்தின் விடுதலைக்காக தங்கள் பிள்ளைகளையும், உறவுகளையும் இளந்து தேசவிடுதலையையே தம் பிள்ளைகளாக வரித்துக்கொண்டவர்கள். இவர்கள் என்றும் கெளரவத்திற்குரியவர்கள். என்றார்.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பிரித்தானியாவில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com