வன்னியில் மீளக் குடியேறியுள்ள மக்களை சிறீலங்கா படையினர் பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் படையினர், மக்களிடம் கப்பம் கோரி வருவதுடன், மீளக் குடியேறிய மக்கள் தமது இடங்களைவிட்டு வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியும் வருகின்றனர்.
இது தொடர்பான பல முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களிற்காக இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
போரில் தமது கணவனை இழந்த, கணவன்மார் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியாக வாழும் பெண்களை அச்சுறுத்தியே, பணம் பறிப்பு இடம்பெறுவதுடன், இதற்கு சில தமிழர்களும் துணை போவதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வன்னி மக்களை சிறிலங்கா படையினர் துன்புறுத்தி வருகின்றனர்