ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (06.09.2010) 10வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று (05.09.2010) Basel, St.Jackob பகுதியிலியிருந்து ஆரம்பித்து பிற்பகல் அளவில் சுவிஸ் - பிரான்ஸ் எல்லையில் சுவிஸ் மக்கள் வழியனுப்பி வைக்க பிரான்ஸ் மக்கள் வரவேற்று பொறுப்பேற்று நடைபயணத்தை தொடர்ந்தனர். இந்நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.
மாலையில் Swiss - France எல்லைப்பிரதேசமான St. Louis என்னுமிடத்தில் தங்கி மீண்டும் இன்று (06.09.2010) காலையில் தமது நடைப்பயணத்தை தொடர்கின்றனர்.
தமக்கு எல்லா வகையிலும் ஆதரவளித்து தாயகத்துக்கான தமது கடமைகளை புரிந்த சுவிஸ் மக்கள் தந்த உற்சாகத்தினால் தாம் திட்டமிட்ட நாட்களிலும் பார்க்க முன்கூட்டியே சுவிஸ் எல்லையை அடைந்துவிட்டதாகவும் இதே மாதிரியான ஆதரவினையும் உற்சாகத்தையும் தொடர்ந்தும் பிரான்ஸ், ஜேர்மனி மக்களும் வழங்குவார்கள் என்று தாம் எதிர்பார்பதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைப்பயணமொன்றை ஆரம்பித்து ஓகஸ்ட் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார்.
அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to 10வது நாளில் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மனிதநேய நடை பயணம்: வரவேற்ற பிரான்ஸ் மக்கள்