18ஆவது அரசியல் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் இருந்து தன்னை மிகத் தொலைவான தூரத்திற்கு இட்டுச்செல்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
18ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
குறித்த சட்ட மூலத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவர் இரண்டிற்கு மேற்பட்ட தடைவைகள் போட்டியிடமுடியும் என்ற விடயமே பிரதானமாகச் சொல்லப்படுகின்ற போதிலும், உண்மையில் அது தான் முக்கிய விடயமல்ல.
மொத்தமாக 14 பக்கங்களைக் கொண்டதாக திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்படுகின்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையைச் சேர்ந்த அனைவருக்கும் எதிரானவையாகும்.
இந்தச் சீர்திருத்தமானது 17ஆவது திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் இல்லாமல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக இந்தச் சட்டமூலத்தின் மூலம் அனைத்து நியமனங்களையும் மேற்கொள்ளும் அதிகாரம் ஒருவரிடமே வழங்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணையாளர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் நிலை அதிகாரிகள் உட்பட்ட மிக முக்கிய நியமனங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அரசியல் சாசன சபையில் இருந்து ஒருவருக்கு வழங்கப்படுகின்றது.
இந் நடவடிக்கையானது அரசியல் சாசன ரீதியான சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் நடவடிக்கையே தவிர நாட்டிற்கு நன்மை தரும் விடயமல்ல.
இதேவேளை தற்போதைய 13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்படுகின்ற சிறுபான்மை இனங்களுக்கான தீர்வுகள் தொடர்பில் காத்திரமான விடயங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
அவற்றில் உள்ள மாகாண சபைகளுக்கான பொதுச்சோவைகள் ஆணைக்குழு, மற்றும் பொலிஸ் அதிகாரம் உட்பட்ட விடயங்களை இல்லாதொழிக்கும் வகையிலேயே புதிய திருத்தச் சட்டமூலம் அமைகின்றது.
தமிழ் மக்களுக்கான தீர்வினை 13 ஆவது திருத்தச் சட்டமூலம் மூலமும் அதற்கு மேலாகவும் வழங்கமுடியும் என்று அரசும் அரசு சார்ந்தவர்களும் தெரிவித்து வந்திருக்கின்றார்கள்.
ஆனால் அதில் போதிய அதிகாரங்கள் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வந்திருந்தமை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே சிறுபான்மை இனங்கள் தமக்கென்று எந்த ஒரு சிறிய அதிகாரத்தினையும் பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கம் கொண்டதாகவே புதிய திருத்தச் சட்டமானது அமைகின்றது.
இதன் மூலம் இனப்பிரச்சினை தீர்வு என்ற விடயத்தில் இருந்து அரசு தன்னை வேறெங்கோ கொண்டு செல்கின்றது என்பதை உணர முடிகின்றது.
இவ்வாறான கபட நோக்கம் கொண்ட புதிய திருத்தச் சட்ட மூலத்திற்கு பங்குதாரர்களாக தமிழ் மக்களைப் பிரதிபலிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் செயற்பட முடியாது என்பதுடன் இந்த திருத்தச் சட்ட மூலத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அனைத்து வகைகளிலும் இலங்கைக்கு எதிரான விளைவுகளைத் தரவல்ல இந்தச் சட்டமூலத்தினை ஆதரிப்போர் எதிர்காலத்தில் இந்த வாக்களிப்பினால் ஏற்படப் போகின்ற பின்விளைவுகள் மூலம் வருத்தப்படுகின்ற காலம் வரும் என்று தெரிவித்த அவர் 1978ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த அரசியல் திருத்தச் சட்டமூலத்தினை எதிர்த்த சுதந்திரக் கட்சி இன்று அதனைவிட மிக மோசமான ஒரு திருத்தத்தினை எந்தவகையில் முன்வைக்கின்றது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
எனவே இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to 18ஆவது அரசியல் திருத்தம் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் நடவடிக்கை