Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான தருணம் இலங்கைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், இந்த விடயத்தை இந்தியா எவ்வாறு அணுகிக் கொண்டிருக்கிறது அல்லது பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பது அவர்களுக்குத் (இலங்கை அரசு) தெரியும் என்று தான் நினைப்பதாகக் கூறியுள்ளார்.

இலங்கைக்கான நான்குநாள் விஜயத்தை வியாழக்கிழமை நிறைவு செய்திருக்கும் நிருபமாராவ், கொழும்பிலுள்ள இந்திய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை புதன்கிழமை சந்தித்தபோது, அரசியல் தீர்வு விவகாரம் குறித்துப் பேசப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனத்தைச் செலுத்தியிருப்பதாகவும் அது தொடர்பாக செயற்படுவதற்கான திட்டத்தைக் கொண்டிருப்பதாகவும் நிருபமா தெரிவித்ததாக "இந்து" பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.

அந்த (அரசியல் தீர்வு) தேவை குறித்து தான் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அது தொடர்பாக நகர்வுகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருக்கிறார். அதில் அவர் பார்வையைச் செலுத்தியிருக்கிறார்.

இப்போது கவனம் செலுத்தப்பட்டிருக்கும் பொருளாதார விவகாரங்கள் அபிவிருத்தி விடயங்களிலும் பார்க்க அப்பால் சென்று கவனிக்கப்பட வேண்டியதாக இந்த விடயம் உள்ளது.

பொருளாதார விடயங்கள், அபிவிருத்தி விவகாரங்களுக்கு அப்பாற்பட்டதாக அரசியல் தீர்வு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்த விவகாரத்தை நாங்கள் (இந்தியா) எவ்வாறு நோக்குகின்றோம் என்பது பற்றி அரசாங்கத்திலுள்ள சகலருமே உணர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தை இந்தியா எப்படிப் பார்கின்றது அல்லது எவ்வாறு அணுகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன் என்று நிருபமாராவ் கூறியுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை நேற்று முன்தினம் பூர்த்தி செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் , இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு விடயங்களில் கவனம் செலுத்தியுள்ளார்.இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மீள்குடியேற்ற விடயத்திற்கு அப்பால் சென்று இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான தருணம் இலங்கைக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை விஜயத்தின்போது சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனுமான தனது கலந்துரையாடல்களின் போது மீள்குடியேற்றத்துக்கு அப்பால் அரசியல் தீர்வுக்கு நகர்ந்து செல்வதற்கான தேவை இருப்பதை தான் வலியுறுத்தியிருந்ததாக அவர் கூறியுள்ளார்."அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வில் கவனம் செலுத்துவது மிகவும் வரவேற்புக்குரியதாகும்.

அதேவேளை, நீண்டகாலம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும், சிறுபான்மையினரின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டுடன் தொடர்புபட்ட விடயங்களை உள்ளடக்கிய நீண்டகால இலக்குகள் குறித்து மனதில் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும் என்று நிருபமாராவ் கூறியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வாரென தெரிவித்திருக்கும் நிருபமாராவ், இருதரப்பு பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடுபவதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் நேரில் சென்று நேரடியான மதிப்பீடுகளை அவர் மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுவதாக நிருபமா கூறியுள்ளார்.

இந்திய உதவி பயன்படுத்தப்படுவது மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக நேரடியாக மதிப்பீடுகள் செய்வதற்காக வட,கிழக்கு மாகாணங்களுக்கு கிருஷ்ணா விஜயம் செய்வாரென எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அரசியல் தீர்வு காண்பதற்கான தருணம் இலங்கைக்கு வந்துள்ளதாக நிருபமா தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com