Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்துக்குப் பாராளுமன்றத்தில் ஆதரவளிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுதினம் திங்கட்கிழமை கூடி ஆராயவுள்ளது.

அரசியலமைப்புத் திருத்த சட்டமூலமானது எதிர்வரும் 8 ஆம் திகதி அவசர சட்டமூலமாகப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு அதன் மீதான வாக்கெடுப்பும் அன்றைய தினமே நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு திங்கட்கிழமை கூடி இது பற்றி ஆராயவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு ஏதுவான எந்த விடயங்களும் கிடையாதென்றும் அநேகமாக அக்கட்சி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவோ அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கவோ கூடுமென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அரசியலமைப்பு திருத்தம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு திங்கள் ஆராயும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com